காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை உள்வாங்கப்பட்டமைக்கு பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியாக ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசின் சிறந்த கல்விக் கொள்கையே எமது மண்ணுக்கு
பெருமை சேர்த்தது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில்  காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை உள்வாங்கப்பட்டமைக்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் குமாரசிறி அவர்கள் தனது  வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணுக்கு தேசிய பாடசாலை ஒன்று கிடைத்தமை அவருக்கும் இந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளது. தற்போதைய ஆளும் அரசின் சிறந்த கல்வித் திட்டத்திற்கு அமைவாக ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றும் தேசிய கல்வி திட்டத்தில் எமது மண்ணும் கௌரவிக்கப் பட்டுள்ளமையையிட்டு இந்த அரசாங்கத்திற்கு நன்றி கூறுகின்றேன்.
 காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையை  எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலைக்கான பௌதீக வளங்களை பெற்றுக்கொடுப்பது எனது எதிர்பார்ப்பாகும் . இப்பாடசாலை தரமுயர்வதற்கு  முன்னின்று உழைத்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில்   காரைதீவு  பிரதேச சபை உறுப்பினர் நன்றியினை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.