ஆறுமுகன் தொண்டமானின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்குவதற்காக ஒழுங்கு செய்திருந்த இரத்த தான நிகழ்வு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (27) ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் வெளி நபர்கள் உட்பட சுமார் 350 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வினை ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பார்வையிட்டதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.