கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் !

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள கம்பனின் உருவச்சிலையடியில் இவ் நினைவு தினம் இடம்பெற்றது.

இதன் போது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் பார்த்தீபனால் சிறப்புரையும் ஆற்றப்பட்டது.இந் நிகழ்வில் செட்டிக்குளம் பிரதேசசபை தவிசாளர் ஜெகதீஸ்வரன், நகரசபை உறுப்பினர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் பார்த்தீபன், மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

FB IMG 1616909482512

IMG 20210328 110248

 

IMG 20210328 110329

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்