மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்த புதிய சட்டமூலம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த சட்டமூலத்திற்கு அமைய 70 வீதமானோர் தொகுதி வாரியான முறைமைக்கும் 30 வீதமானோர் விகிதாசார முறைமையின் கீழும் உறுப்பினர்களை தெரிவுச் செய்வதற்கு அமைச்சரவையில் தமது இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தனர்.

ஆனால் தொகுதிவாரி முறைமையின் கீழ் ஒரே கட்சியைச் சேர்ந்த மூவர் தெரிவுச் செய்யப்படுவதற்கு அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, குறித்த யோசனை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்தாக அறிய முடிகின்றது.

அதுவரை குறித்த அமைச்சரவை பத்திரத்தை கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.