போக்குவரத்து கான்டபிள் விளக்கமறியிலில்..

பன்னிப்பிட்டியவில், ​லொறி சாரதியை கீழே தள்ளிவிட்டு அவர் மீது ஏறி குதித்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பொலிஸ் போக்குவரத்து கான்டபிள், ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை முட்டிமோதி தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட லொரியின் சாரதி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருடை வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள், ஒரு விளையாட்டு வீரர் என்பது தெரியவந்துள்ளது. அவர், ரெஸ்லின் விளையாடுபவர்கள் எனவும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், படுகாயமடைந்துள்ள போக்குவரத்து பொலிஸ் ​பொறுப்பதிகாரி, வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை​ப்பெற்று வருகின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்