சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்ட 24 பேர்

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 24 பேர், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர்.

குடிவரவு – குடியகழ்வு சட்டத்தினை மீறி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அந்நாடுகளில் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மனில் இருந்து 20 பேரும் சுவிட்சர்லாந்தில் இருந்து 04 பேரும் இவ்வாறு திருப்பியனுப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் அனுப்பி வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், பின்னர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்