அம்பாரை மாவட்டத்தில் வீதியோரங்களில் களைகட்டும் வெள்ளரிப்பழம் விற்பனை

அம்பாரை மாவட்டத்தில் நிலவும் வெப்பமான காலநிலைக் காரணமாக  வீதியோரங்களில்
வெள்ளரிப்பழம் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது

இதற்கமைய கல்முனை ,சாய்ந்தமருது பாண்டிருப்பு ,காரைதீவு ,மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பகுதிகளில் பிரதான வீதியோரங்களில்  மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில்
வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்  பொது மக்கள் இவ் வெள்ளரிப்பழத்தினை  ஆர்வத்துடன் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

ஒரு வெள்ளரிப்பழம் 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இவ் வகை பழங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு பிற பகுதிகளுக்கு விற்பனைக்காய் கொண்டு  செல்லப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது. மேலும் இவ் வகை பழங்கள் அதிகமான வெப்ப காலப்பகுதியில் அதிமாக விளைச்சலாகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.