மோப்ப நாய்களுக்கான மிருக வைத்தியசாலை திறப்பு

வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய்களுக்காக கள பொறியியல் படையணியின் கே9 பிரிவில் ஸ்தாபிக்கப்பட்ட மிருக வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அறுவைசிகிச்சை வசதி, தயார்படுத்தல் பிரிவு, மீட்டல் பிரிவு மற்றும் வார்டு என்பவற்றை கொண்ட இந்த மிருக வைத்தியசாலையில் அல்ட்ரா செளன்ட் ஸ்கேனிங், எலக்ட்ரோ கார்டியோகிராஃப் யூனிட் மற்றும் டிஜிட்டல் ரேடியோ வரைபட வாசிப்பு என்பவற்றை மேற்கொள்ளும் வசதிகளையும் கொண்டுள்ளது.

இதேவேளை, பூ ஓயாவில் வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த 24 மோப்ப நாய்களும் அவற்றை கையாளும் 29 இராணுவ வீரர்களும் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியேறினர்.

இந்த நிகழ்வில் கள பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.