இலங்கை-பாகிஸ்தான் இராணுவத்துடனான கூட்டுப் பயிற்சிகள் நிறைவு

எதிரிகளின் மறைவிடங்களை மறைந்திருந்து தாக்குவது தொடர்பில் கஜபா படையினர் மற்றும் பாகிஸ்தான் படையினர் இணைந்து 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட 'ஷேக் ஹேண்ட்ஸ் – 1’ கள பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன.

அதற்கான இறுதி ஒத்திகை நிகழ்வுகள் அண்மையில் சாலியபுரவில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் இலங்கைக்கான பாக்கிஸ்தானின் உயர் ஸ்தானிகரும் 'ஷேக் ஹேண்ட்ஸ்’ பயிற்சிகளின் திட்ட வடிவமைப்பாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) அதிமேதகு. முஹம்மது
சாத் கட்டாக் மற்றும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் பன்முகத் திறன்கள் உள்ளக போர் தந்திரோபாயங்கள், எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்கள் உபாயங்கள், நவீன பயிற்சி முறைகள் என்பன உள்ளடங்கியிருந்ததுடன் இந்த பயிற்சிகள் முதல் முறையாக கஜபா படையணி தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்தாகும்.

இப் பயிற்சியில் பாக்கிஸ்தான் இராணுவத்தின் 06 அதிகாரிகள் மற்றும் 35 சிப்பாய்களும், இலங்கை இராணுவத்தில் கஜபா படையணியின் 4 அதிகாரிகள் மற்றும் 40 சிப்பாய்களும் பங்கேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்