.யாழில் இளைஞன் மீது தாக்குதல் – மீட்க வந்த இளைஞனுக்கு கத்திக்குத்து!

யாழ். கல்லுண்டாய் பகுதியில் இளைஞன் ஒருவரை இனம்தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கண இளைஞனை மீட்க வந்த நண்பன் மீதும் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.நகர் பகுதியில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றும் இளைஞன் கடமை முடித்து கல்லுண்டாய் வீதி வழியாக வீடு திரும்பியுள்ளார்.

அவ்வேளை குறித்த இளைஞனை வீதியில் வழிமறித்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. காயமடைந்த இளைஞனை அவ்விடத்தில் விட்டு விட்டு அக்கும்பல் சென்றுள்ளது.

காயத்திற்கு இலக்கண இளைஞன் தொலைபேசி ஊடாக அராலியில் உள்ள தனது நண்பனுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலுக்கு இலக்கண இளைஞனை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல அவரது நண்பன் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்ற போது , அராலி பலத்தடியில் வைத்து இளைஞனை தாக்கிய கும்பல் மறித்து கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அக்கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி சென்ற பின்னர் இரு இளைஞர்களும் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்