தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை..

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த பிரேரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையை நாளை பிற்பகல் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போது சபை முதல்வர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இந்த விசேட குழு 15 உறுப்பினர்களை கொண்டமையவுள்ளதுடன்இ சபாநாயகரினால் குழு நியமிக்கப்பட்டதை அடுத்து 06 மாதங்களில் அதன் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதும் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவின் பொறுப்பாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்