தற்பொழுது நிலவும் கடும் உஷ்ணக் காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்

தற்பொழுது நிலவும் கடும் உஷ்ணக் காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்கள் தேவையில்லாமல் அச்சப்படவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டார். இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த உஷ்ணத்திற்கான காரணமாகும்.

உஷ்ணம் காரணமாக நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்துடன் ஒன்று சேரும். இந்நாட்களில் காணப்படும் நிலமைக்கு அமைய மழைக்கான முகில் விருத்தியடையும் சாத்தியம் குறைவாகும்.

இதனால் மழை பெய்வதற்கான சாத்தியம் இல்லை. காற்றும் குறைவடையும் வாய்ப்பு உள்ளது. இந்த வெப்பக் காலநிலையில் கூடுதலாக வியர்வை சிந்தும் போக்கு காணப்படும்.

இரண்டு வாரங்களில் இந்த நிலமை குறைவடையலாம். உடலை வருத்தக்கூடிய வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கூடுதலாக நீர் அருந்துமாறும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க பொதுமக்களைக் கேட்டுள்ளா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்