ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி எதிர்நோக்கும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பல, தங்களது பங்களிப்பைச் செய்வது போன்று மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆரையம்பதி பிரதேசத்திற்குட்பட்ட அரச மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் வருடாந்தம் இரத்த தான முகாம்களை நடாத்தி வருகின்றது.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான இரத்ததான முகாமானது இன்று 05.04.2021 திங்கட்கிழமை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்றது.
உதிரம் கொடுத்து உயிர்காக்கும் உன்னத பணியினை பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச இளைஞர், யுவதிகள்  இணைந்து நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்