புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்காக பஸ் சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு தடைகளின்றி போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப் படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தில் விசேட புகையிரத சேவைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பிரதான புகையிரதப் பாதை மற்றும் கரையோரப் புகையிரதப் பாதை உட்பட அனைத்து புகையிரதப் பாதைகளூடாகவும் விசேட புகையிரத சேவைகள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்த விசேட புகையிரத சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்