சித்திரை புத்தாண்டு காலத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தமிழ் மற்றும் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு  எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், அனுமதிப்பெற்ற சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் குறிப்பிட்ட சில விற்பனை நிலையங்களில் குறித்த நாட்களில் மதுபான சாலைகளை திறக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் ஏப்ரல் 26 ஆம் திகதி மூடப்படும்.இக் காலகட்டத்தில் ஆல்கஹால், போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க 1913 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்