மாணவர்களுக்கு அடிப்படைவாத விரிவுரை நடாத்திய இருவர் கைது!

அம்பாறை, ஒலுவில் பகுதியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு தீவிரவாத சித்தாந்தங்கள் குறித்த சொற்பொழிவனை நடத்தியமைக்காக இரு சந்தேக நபர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒலுவில் பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

இவர்கள் தமது சொற்பொழிவுக்காக பல்வேறு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் காணொளி காட்சிகள் மற்றும் விரிவுரைகளின் உள்ளடக்கத்தை பயன்படுத்தியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அது மாத்திரமன்றி மாணவர்களுக்கு உடற் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அதனை ஏற்க மறுக்கும் மாணவர்கள் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் கைதான நபர்கள் கொழும்புல் உள்ள பயங்கரவாத புலனாய்விப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்