ரஞ்சனின் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமனம்

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதனை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று அறிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அஜித் மான்னப்பெருமவின் பெயர் ரஞ்சனின் வெற்றிடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்ததாக அஜித் மான்னப்பெருமவே அதிக வாக்ககளைப் பெற்றுள்ளார்.

அஜித் மான்னப்பெரும இதற்கு முன்னர், ஐக்கியத் தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்தனவின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப 2013 ஜூலை மாதம் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.