கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் மஞ்சள் அறுவடை

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில்
பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செய்கையானது  வெற்றிகரமாக
அறுவடை  செய்யப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் .ரஹ்மான் அவர்களின் தலைமையில் இவ் மஞ்சள்  அறுவடை  நேற்று [10] சனிக்கிழமை இடம்பெற்றது.

சுமார் 25kg  அளவிலான மஞ்சள் இதன் போது அறுவடை செய்யப்பட்டதுடன்,
இவ்  அறுவடை நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள்  , தாதியர்கள்,  ஊழியர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர் .

 

மேலும் இவ் வைத்தியசாலை வளாகத்தில் பயன்தரும் செடி வகைகள்  பல பயிரிடப்பட்டுள்ளதுடன் , இதேவேளை கடந்த வருடங்களில் தேசிய ரீதியில்  இவ் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்று சூழல் விருது  ,தேசிய தூய்மை உற்பத்தி விருது ஆகியவற்றில்  சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பன கிடைக்கப்பெற்றமை
இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்