கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களைகட்டிய வியாபாரம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளது.
தமிழ் – சிங்கள புதுவருடம் புதன் கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி புத்தாடைகள், இனிப்பு பொருட்கள், வெடிகள் என்பவற்றையும் மரக்கறிகளையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இதனால் வவுனியா நகரம் சனச்செரிசல் மிக்கதாக காணப்படுவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்