125 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 12 பேர் கைது

‘ஐஸ்’ என்ற போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்களிடமிருந்து 125 கிலோகிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

110 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் சபுகஸ்கந்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.. இதனுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

வனவாசல மற்றும் மாபோல பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் அடங்குகிறார்கள்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வெயல்படும் ரூபன் மற்றும் லால் ஆகிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வழிகாட்டலுக்கு அமைய இந்தக் கடத்தல் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி, ஹொரணை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

டுபாயில் தலை மறைவாக இருந்து செயற்படும் நிபுண என்பவர் கடல் வழியாக இதனை நாட்டிற்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார் என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் பற்றி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்