காரைதீவில் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கல் !

(எம்.என்.எம்.அப்ராஸ்)

புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் 5000 ருபா விஷேட நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டம் நாடாளவிய ரீதியாக இடம்பெற்று வருகிறது

கொரோனா காரணமாக  நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர், அங்கவீன கொடுப்பனவை பெறுவோர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கல்  இரண்டாவது நாளாகவும் [13]இன்று இடம்பெறுகிறது.இதற்கமைய காரைதீவு பிரதேச செயலக பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு 5000 ருபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனின் வழிகாட்டலில் காரைதீவு -சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ் .சதீஸ் அவர்களின் தலைமையில் உரிய பயனாளிகளுக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் வழங்கி வழங்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இக்கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.