குளக்கட்டினுள் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் காயம்

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (12) இடம்பெற்ற இவ்விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூமாங்குளம் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டினை அண்மித்த சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குளக்கட்டினிலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியினை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்