உங்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த வளமான ஆண்டாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்

அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன், என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டு மக்கள் பழங்காலத்திலிருந்தே பழங்கால பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் முன்னுரிமை அளித்து, விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் கலாசார ரீதியாக மதிப்புமிக்க சமூக நடைமுறைகள் இந்த தமிழ் சிங்கள புத்தாண்டின் மூலம் நினைவு கூரப்படுகின்றது.

அரசாங்கம் வழங்கிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி ஒழுக்கமான மக்கள் என்ற வகையில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புகள் காரணமாக, இப்புத்தாண்டை இந்த அளவிற்கேனும் சுதந்திரமாக கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே, சுகாதார நடைமுறைகளை மனதில் கொண்டு நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

இப்புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த வளமான ஆண்டாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்