மாவை சேனாதிராசாவின் புத்தாண்டு வாழ்த்து

சித்திரைப் புத்தாண்டு பிலவ ஆண்டாக 13.04.2021 நள்ளிரவுக்குப்பின் 14.04.2021 அதிகாலை பிறக்கின்றது.

இலங்கையில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் இப் புத்தாண்டைக் கொண்டாடுவத போல இந்து மத மக்கள் இந்திய நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் விழாவாக இடம்பெறுவது பாரம்பரியமாகும்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்துவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுமிருப்பதனால் உலக சுகாதார நிறுவனத்தின் கட்டுப்பாடுகளையும் அந்தந்த நாடுகளின் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.

இலங்கையில் தமிழ் மக்கள் 1958 முதல் இனக் கலவரங்களினாலும், இனப் போரினாலும் பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்துவிட்டும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் இனவிடுதலையுமின்றி தினமும் பௌத்த சிங்கள ஆட்சிகளினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களாய் தங்கள் தேசத்தினதும்ரூபவ் மக்களின் பாதுகாப்பற்ற மனிதர்களாய் அவலத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

இருப்பினும் தங்கள் இன விடுதலைக்காகவும், தங்கள் தமிழ் தேசத்தின் விடுதலைக்காகவும் தினமும் போராடிக்கொண்டேயிருக்கின்றனர். எவ்வாறெனினும் தைப்பொங்கல் கொண்டாட்டங்களின் போது தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற திடசங்கற்பத்தோடு சித்திரைப் புத்தாண்டையும் புத்தெழுச்சியுடன் கொண்டாடுங்கள் என்றே வேண்டிநிற்கின்றோம்.

பிலவ சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவருடனும் பங்குகொண்டு வாழ்த்தி நிற்கின்றோம்.

மாவை.சோ.சேனாதிராசா.
தலைவர், இ.த.அ.கட்சி
துனைத்தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்