சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் அல் அமீன் றிஷாத் கடமையேற்றார் !

[நூருல் ஹுதா உமர்]

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக  சாய்ந்தமருதை சேர்ந்த டாக்டர் அல் அமீன் றிஷாத் இன்று (15) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சி. மாஹிர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிடாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, சாய்ந்தமருது  ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஏ.ஏ. மஜீத் , சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பளீல்,  தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.றஸ்மி உள்ளிட்ட பொது சுகாதார உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்