மருமகனின் கத்திக்குத்தில் மாமியார், மச்சான் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா கண்டி வீதி , வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக  மருமகன் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படு காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (16) பிற்பகல் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மரம் ஒன்றுக்கு பின் மறைந்திருந்து மனைவியின் சகோதரனான மச்சானுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார் .

இந்நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் இடுப்பு முதுகில் குத்தியுள்ளார் .

இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் கத்தியால் குத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .

கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த கத்திக்குத்து மேற்கொண்ட இளைஞனை அப்பகுதியிலிருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

காயமடைந்த இருவரும் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) , அசோகன் வசந்தி (வயது – 52) எனவும் இவ்வாறு இவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடுகள் நீண்டநாட்களாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் இதன் வெளிப்பாடே இன்றைய கத்திக்குத்துச் சம்பவம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்