ஆரோக்கியமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் வுவுனியாவில் முருங்கை மரம் வழங்கி வைப்பு

ஆரோக்கியமான எதிர்காலம் எனும் தொணிப்பொருளில்  முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபல்யப்படுத்துவதற்கான “வாழ்க்கைக்கான தோட்டம்” எனும் தேசிய வேலைத்திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வேலைத்திட்டம் வவுனியா நொச்சிமோட்டை நரசிங்கர் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்களிற்கு முருங்கை கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டதுடன், முருங்கையின் மருத்துவ பயன்கள் தொடர்பாகவும், பொருளாதார நன்மைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் லவன், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் இணைப்பாளர் கி.டினேஸ், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் நே. விஸ்ணுதாசன், நகரசபை உறுப்பினர் த.பரதலிங்கம் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

DSC01010

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்