ஹட்டன் போடைஸ் பகுதியில் வெள்ளம் – 50 குடும்பங்கள் பாதிப்பு – ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை

(க.கிஷாந்தன்)

ஹ ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ்  பகுதியில் 17.04.2021 அன்று  மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

 

எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர்.

 

இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

அத்தோடுஹ ட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி 17.04.2021 அன்று மாலை நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

 

எனினும், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயத்தை 17.04.2021 அன்று இரவு மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

 

அதனை தொடர்ந்து குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.