அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது.

நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், ஜனாதிபதி நேற்று (01) முற்பகல் மிரிஹானவில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு மஞ்சள் கன்றை நாட்டினார்.

வீட்டின் மஞ்சள் தேவையை தங்கள் சொந்த வீட்டுத் தோட்டத்திலிருந்து பூர்த்தி செய்வதற்காக, ஒரு குடும்பத்திற்கு 05 மஞ்சள் கன்றுகள் வீதம் 15 லட்சம் குடும்பங்களுக்கு கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.

உயர்தர கன்றுகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் உள்ள விவசாய திட்ட அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

அமைச்சர் பந்துல குணவர்தன, ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹன அபேரத்னே ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.