அரச சுற்றுநிருபங்களுக்கு முரணாக நடந்து கொள்வதை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் நிறுத்துமா? அ.மு. சே.உ தொழிற் சங்கம் வேண்டுகோள்!

அரச சுற்றுநிருபங்களுக்கு முரணாக நடந்து கொள்வதை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் நிறுத்துமா? அ.மு. சே.உ தொழிற் சங்கம் வேண்டுகோள்!
முகாமைத்துவ சேவை உத்தியோத்தருக்குரிய பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவி (நிதிப் பிரிவில்) மீண்டும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது, தொடர்பில் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் 2021.05.06 ஆந் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளது.
முறைப்பாட்டினை மேற்கொண்டதன் பின்னர் தொழிற்சங்கத்தின் தலைவர்  ஏ.ஜீ.முபாறக் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2017 ஆம் ஆண்டிலும் இவ்வாறு ஒரு தடவை சுற்று நிருபங்களுக்கு முரணாக பதவி வழங்கபட்ட போது இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்குரிய கடமைப் பொறுப்புக்களை அவர்களுக்கே வழங்கும்படி பணித்திருந்தனர். குறித்த கடிதங்களின் பிரதிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து இப்பதவி தமது சேவையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்ட போதிலும், அவர் வருடாந்த இடமாற்றம் பெற்று சென்றதைத் தொடர்ந்து மீண்டும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் சுற்று நிருபங்களுக்கு முரணாக நடந்து கொள்வது தொடர்ந்து வருவதாகவும், அரச சேவையில்லாதவர்கள் அலுவலகத்தில் கடமையாற்றுவது, ஓய்வு பெற்றுச் சென்றவர்கள் தொடர்ந்தும் இருந்தமை, பிரயாணக் கொடுப்பனவினை வழங்க மறுத்து ஊழல் மோசடிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்று அறவிட்டமை என பல முறைகேடுகள் சுட்டிக்காட்டத்தக்கன.
இவ்விடயங்கள் தொடர்பாக கல்விச் சேவை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்கப்படவுள்ளதென இதன்போது தெரிவித்திருந்தார்.
Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.