மட்டக்களப்பில் பொலிசாரினால் கொரோனா விழிப்புணர்வு!

கொவிட் 19 மூன்றாம் அலையின் பின்னர் நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்துவருவதுடன்  நாளாந்தம் தொற்றாளர்களை இனங்காணும் வீதமும் அதிகரித்தவண்ணமே உள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட கொவிட் 19 செயலணியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக  பல்வேறுபட்ட  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைவாக நேற்றைய தினம் 08.05.2021 சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகர் சுதத் மாசிங்க தலைமையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் விழிப்புணர்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் இவ்விழிப்புணர்வு நடவடிக்கையில் பங்கேற்றிருந்ததுடன், தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் இதன்போது பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்