திருகோணமலை முத்துநகரில் காட்டு யானைகள் அட்டகாசம்

திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் கிராமத்தில் நுழைந்த காட்டு யானையால் இரு கடைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது நேற்றிரவு குறித்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் கடைகளையும் உடைத்து பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.

இவ்வாறான தாக்குதல் சம்பங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் அரங்கேறியுள்ளதாக பிரதேச வாழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காட்டு யானையின் தொடர் தாக்குதலால் இரவு வேளைகளில் நிம்மதியாக உறங்க முடியாத இக்கட்டான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் எதுவித தீர்வும் கிடைக்கவில்லை என்றும் பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்