போசாக்கு குறைந்த பிள்ளைகளுக்கு மருத்துவ உதவி கொடுப்பனவு !

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நோயால் பாதிக்கப்பட்ட தொடர்ந்து மருந்து எடுக்க வைத்தியசாலைக்கு செல்லும் போசாக்கு குறைந்த பிள்ளைகளுக்கு மருத்துவ உதவி கொடுப்பனவு  வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் சு.ஹரன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ்,
நிருவாக உத்தியோகத்தர்,உளநல உத்தியோகத்தர்,
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நோயால் பாதிக்கப்பட்ட தொடர்ந்து மருந்து எடுக்க வைத்தியசாலைக்கு செல்லும் போசாக்கு குறைந்த பிள்ளைகளுக்கு மருத்துவ உதவி கொடுப்பனவு 5000 ரூபாய் வீதம் இருபது பேருக்கு வழங்கப்பட்டது
தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதியில் வைத்தியசாலைக்கு மருந்து எடுக்க செல்வதில் பயண சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு இக் கொடுப்பனவு உதவியாக அமைகிறது என செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.