வற்றாப்பளை பொங்கல் உட்சவம்; தீர்த்தம் எடுக்கசெல்பவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தின் தீர்த்தம் எடுத்தல் உட்சவம் நாளை(17) திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையினை கருத்தில்கொண்டு அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனுமதிக்கப்பட்ட நபர்கள் 24 பேருக்கும் பி.சி.ஆர் பரிசேதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு கலந்துகொள்ளவுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம், கிரியைதாரர்கள், முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் சிலாவத்தை கோவில்காரர்கள், நோன்பு மடத்தில் நிற்பவர்கள், தீர்த்தக்கரையில் உள்ள ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினர் என தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள 18 பேருக்கும் 15.05.2021 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஆறு பேருக்கும் 16.05.2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உழவு இயந்திரத்தில் மட்டுப்படுத்திய நபர்கள் மட்டும் தீர்த்தம் எடுக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்வுக்கான தீர்த்தம் எடுத்தல் நிகழ்வு நாளை 17.05.21 அன்று நடைபெற்று முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி இடம்பெறும் அத்தோடு தொடர்ந்து எழு நாட்கள் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்று 23.05.21 அன்று ஞாயிற்றுக்கிழமை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து தீர்த்தம் வற்றாப்பளை அம்மன் ஆலயம் எடுத்து செல்லப்பட்டு 24.05.21 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கள் நடைபெறுவது வழக்கம்.

பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வு நடைபெற அரசாங்க அதிபர் , காவல்துறையினர், ஆலய நிர்வாகத்தினர் ,சுகாதார பிரிவினர் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட கூட்டங்களில் தீர்மானமாக எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவினரும் படையினரும் மட்டுப்படுத்தப்பட்ட நபர்களே நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர பக்த்தர்கள் எவரும் நாட்டு நிலமையினை கருத்தில்கொண்டு கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.