யாழில் சட்டவிரோத மதுபான சாலை முற்றுகை

யாழ்ப்பாணம் -கோப்பாய் பொலிஸ் பிரிவில் மதுபான சாலை ஒன்று மதுவரித் திணைக்களத்தினால் சீல் செய்யப்பட்டதுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் திகதிவரை மதுபான சாலைகளை மூட மதுவரி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதனை மீறி மதுபான சாலையைத் திறந்த குற்றச்சாட்டில் அதன் முகாமையாளர், விற்பனையாளரும் அரச சாராயத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்