மட்டக்களப்பு மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான நேற்று காலை 10 மணியில் இருந்து இன்று காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 32 ஆக அதிகரித்துள்ளது

வைத்தியசாலையில் இருந்து 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் தொடர்ந்தும் 957 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கடந்த 7 நாட்களில் 786 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்