மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன ஊறணி பகுதியை நாளை திறக்க பரிந்துரைப்பு

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை (03) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முணை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலைமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், சின்ன ஊறணி, நொச்சிமுனை ஆகிய 5 கிராமசேவகர் பிரிவுகள் கடந்த 14 திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது. இதில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாலைமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், ஆகிய 3 கிராமசேவகர் பிரிவுகள் திறக்கப்பட்டது

இந்த நிலையில் சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை (04) திறப்பதற்காக தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.