பியுமி ஹன்சமாலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 13 பேர் பிணையில் விடுதலை

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 13 பேரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி குறித்த பிறந்தநாள் கொண்டாடத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் நேற்று (01) மற்றும் இன்றைய தினம் 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்