சிறுமியின் மரணம் தொடர்பில், இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய நிலையில், உயிரிழந்த 16 வயதான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில், இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தரகர் பொன்னையாவின் வங்கிக் கணக்கு தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்