தடுப்பூசிகளை வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்!

கொழும்பு நகரத்தில் வாழும் பொதுமக்களுக்கு, கோவிட் 19 தடுப்பூசிகளை வழங்க கொழும்பு மாநகர ஊழியர்கள் சிலர், பணம் கோரியமை தொடர்பில் உள்ளக ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளக விசாரணையை விரைவுபடுத்துமாறு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.

பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குற்றப்புலனாய்வு துறையிடம் முறையிடப்போவதாக சில உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க ஊழியர்களில் இருவர் 5000 ரூபா முதலான தொகையை கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க ஏற்கனவே மாநகர ஆணையாளர், ரோஷினி டயஸுக்கு இது குறித்து விசாரணை நடத்துமாறு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே அறிவுறுத்தியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.