கண்ணீர் வணக்கம்!!!

தம்பி செந்தூரா நீ சொல்லாமல் எமைவிட்டு விண்ணுலகம்
சென்றதேனோ?

நித்தமும் செல்வண்ணை கலா அக்காவென நலம் விசாரித்திடுவாயே
இன்று மட்டும் ஏன் நீ
சொல்லாமல் சென்றாயோ?

நீ இங்கிருக்கும் சிவன் அம்மனுக்கு உடுக்கையொலி கேட்கவேண்டுமென அனுப்பிய உடுக்கை வந்து சேரமுன் நீ எமை விட்டு சென்றதேனோ?

புங்கடியானும் அம்மனும் வீரனும்
உனைக்காக்க தயங்கியதேனோ?
கட்டிய மனைவி கதறியழ
பெற்றபிள்ளையோ புரியாது
தவித்திருக்க
பெற்றவளும் உடன்பிறந்தோரும்
உறவினரும் நண்பர்களும் தவிப்பதை நீ அறியாயோ?

அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
தமிழ் கலை கலாச்சாரத்துடன்
பக்குவமாய் வழி நடந்தாய்
ஆன்மீக சிந்தனையை சிரமேற்றி
அறவழி நீ நின்றாய்
பாட்டுடன் இசையும் பயின்று
பல மாணாக்கரை நீ தந்தாய்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தாய்
ஏனோ உனை இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்?

துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரமாய் அடைக்கலம்
தந்த உம்மை
ஆண்டவன் ஏனழைத்தான்
பண்புள்ளோரை பல காலம்
வாழவிடக் கூடாதென்றோ?

என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம் என் செய்ய செந்தூரா வந்தபணி
முடிந்ததென்று இறைவனடி சென்றுவிட்டாய் உன் ஆத்மாசாந்தியடைய நாம் வணங்கும் கச்சாயூர் கடவுளர்கள் யாவரையும் வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி

உன்பிரிவால் துயருறும்
ஆழ்ந்த இரங்கலுடன்

செல்வன் கலா குடும்பம்(சுவிஸ்)
கலைமதி குடும்பம்(யேர்மனி)
சசிகலா மற்றும் கலைச்செல்வி குடும்பம்(பிரான்ஸ்)
கலைவதனி குடும்பம்(சுவிஸ்)
ராசா குடும்பம்(கொலண்ட்)
காந்திமாமா(இலங்கை)
கமலினி குடும்பம்(இலங்கை)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.