பொதுச் சுகாதாரப் பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைது

வாழைச்சேனை பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

காயமடைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியபோது, இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

சுகாதார சேவையில் பணியாற்றும் அதிகாரிகளைத் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்