கொழும்பில் சவப்பெட்டியுடன் காத்திருக்கும் மக்கள்!

 

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே சவப்பெட்டிகளுடன் மக்கள் காத்திருக்கும் புகைப்படத்தை நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு அருகே உள்ள வோட் பிரதேச வீதியில் இந்தப் புகைப்படங்கள் பதிவாகியுள்ளது.

மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளை முச்சக்கர வண்டிக்கு மேலே வைத்து கட்டிய நிலையில், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள் உடல்களை பொறுப்பேற்க காத்திருப்பதை அந்த புகைப்படம் காட்டுவதாக இதனை பதிவிட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்