நடிகை சமந்தா இலங்கை தமிழர் விடயத்தில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.

பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுவரை அதுகுறித்து கருத்து சொல்லாமல் இருந்த அவர் தற்போது முதல் தடவையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமந்தா அளித்துள்ள பேட்டியில், “வெப் தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அதில் நான் நடிக்கவில்லை. மக்கள் உணர்வை மதிக்கிறேன். எனது நடிப்பு யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பேமிலிமேன் வெப் தொடரில் சமந்தா போராளியாக நடித்து இருந்தார். அவரது கதாபாத்திரம் இலங்கை தமிழர்களை புண்படுத்துவதாக உள்ளது என்று கண்டனங்கள் கிளம்பின.

தொடருக்கு தடை விதிக்கும்படி அரசியல் கட்சிகள் வற்புறுத்தின. ஆனால் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் அந்த தொடர் வெளியானது. சமந்தா சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் ஓய்வு எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்