மாநில செயற்குழு கூட்டம் – 29.08.2021-

தமிழ்நாடு மின்வாரிய மறுமலச்சி தொழிலாளர் முன்னேற்ற
சங்கத்தின்  மாநில செயற்குழு கூட்டம் 29.08.2021 அன்று சென்னை,
தாயகத்தில் வைத்து, மாநில தலைவர் வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ்
தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜீவன், மாநில
துணைத்தலைவர் ஆறுமுகம், ரவி மற்றும் துணைப்பொதுச்செயலாளர்
வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர்
அனல்செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். மாநில மீனவரணி
செயலாளர் நக்கீரன் தொகுத்து வழங்கினார்

சங்கத்தில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்த
செயலறிக்கையை மாநில பொதுச்செயலாளர் கஜேந்திரன் முன் வைத்து
பேசி, அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் பதிலளித்து
பேசினார்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சங்கத்தின்
இணைய தளத்தை துவக்கிவைத்து, தொழிற்சங்க முன் னோடிகளுக்கு
நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். அவரது சிறப்புரையில் மின்வாரிய பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்திட, விடுபட்ட
கேங்மேன் பணியாளர்கள் 5336 தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிட, அனல்மின் நிலையங்கள் மற்றும் மின்விநியோக
வட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம்
செய்ய வேண்டும், சேங்மேன் பணியாளர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கிட வேண்டும் உட்பட
பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிற்சங்கத்திற்கு
உறுதுணை வழங்கப்படும் என உறுதியளித்து, சட்டமன்றத்தில்
மின்துறை மானிய கோரிக்கையில் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள்
இந்த கோரிக்கைகள் குறித்து பேசுவார்கள் எனவும் குறிப்பிட்டார்
துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சாத்தூர் சட்டமன்ற
உறுப்பினர் மருத்துவர் ரகுராமன், மாவட்ட செயலாளர்கள் கழககுமார்,
சைதை சுப்பரமணியன், ரமேஸ்மகேந்திரவர்மன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்