நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு – நெல்லை பதுக்கி வைத்த கடைகளுக்கு சீல்..!

அம்பாறை மாவட்ட நுகர்வோர்  அதிகார சபையினரால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஒலுவில் பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு  அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது.
பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது பொருட்களினை  பதுக்கி  வைப்பது தொடர்பான பொது மக்களினால் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின்  மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன தலைமையிலான குழுவினர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது பல களஞ்சியங்களில் அனுமதி பெறாமல் நெல் மூடைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியான வியாபார நிலையங்களுக்கு  எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன்  மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக  அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின்  மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன இதன் போது தெரிவித்தார். களஞ்சியத்தில் உள்ள பல ஆயிரம் நெல் மூடைகளை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு இதன் போது ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.