பாடகர் சுனில் பெரேராவின் மரணம் அதிர்ச்சி தருகிறது – சஜித் கவலை…

பாடகர் சுனில் பெரேராவின் மறைவிற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வௌியிட்டுள்ளாார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளங்களில் இவ்வாறு கூறியுள்ளார்.

“இலங்கையின் இசை வரலாற்றில் ஒரு நவீன புரட்சியின் முன்னோடியான திரு சுனில் பெரேராவின் திடீர் மறைவு எனக்கு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இசைத் துறையில் அவர் எனது ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் இருந்துள்ளார், அத்தகைய தனித்துவமான மற்றும் திறமையான ஆளுமையுடன் இணைந்திருந்ததையிட்டு நான் பெருமைப்படுகிறேன். அவரது மறைவு இசைத்துறையில் உள்ள தோழர்களுக்கும், மக்களுக்கும், நம் நாட்டிற்கும் பெரும் இழப்பாகும், அன்னார் மோட்ச நிலையை அடையப் பிரார்த்திக்கின்றேன்.”

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்