பரீட்சைகளின் திகதி அறிவிப்பு…!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் இதுவரையில் மாற்று தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமைக்கு மத்தியில் இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சிலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திலோ அண்மையில் கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லைஎன்றும் அவர் மேலும் கூறினார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் மாதம் 14 ஆம் திகதியும் , உயர்தர பரீட்சைகளை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்