கொரோனா காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் அகதிகளும்…

கொரோனா பெருந்தொற்று சூழலினால் தொழில்நுட்பம் சார்ந்து இயங்க வேண்டிய நிலை அதிகரித்துள்ளதால் டிஜிட்டல் தொழில்நுட்ப ஏற்பாடுகளும் அதற்கான திறன்களும் ஆஸ்திரேலியாவில் குடியமரக்கூடிய அகதிகளுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

சமீபத்தில் Foundations for Belonging 2021 என்ற தலைப்பின் கீழ் Settlement Services International மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அகதிகள் குடும்பத்தினரிடையே குறைந்த அளவிலான மடிக் கணினிகள், கணினிகள், டேப்லட்டுகள் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கற்றலின் போது சிரமங்களை எதிர் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், டிஜிட்டல் திறன்களில் தொடர்ந்து சிறு அளவிலான பாலினப் பாகுபாடு நிலவுகிறதுதாகவும் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவிலேயே இணையத்தை பயன்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.

வங்கி ரீதியான பரிவர்த்தனைகள், கல்வி ரீதியான பயன்பாடு, சுகாதார சேவைகள் மற்றும் சமூக ரீதியான பலன்களை பெறுவதற்கான இணைய வழி அணுகலை அகதிகளாக வந்த பெண்கள் குறைந்த அளவிலேயே கொண்டிருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.