குடியுரிமைக் கல்வி பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி: அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சட்டக் கல்வியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கு பரிந்துரைப்பற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் அது தொடர்பிலான உபகுழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குடியுரிமைக் கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பாகமாக இதனை உள்ளடக்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பிலும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் ஆலோசனை தெரிவுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களுக்கு பின்னர் கல்வி அமைச்சின் ஆலோசனைக்கான தெரிவுக்குழு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நேற்று (11) கூடியது.

நாட்டிற்கு தேவையான கல்விக் கொள்கையொன்றை உருவாக்கி வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.